புத்தளம் நகரி்ல் முதன் முறையாக கேக் மற்றும் உணவு அலங்காரக் கலை கண்காட்சி எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை புத்தளம் நகர மண்டபத்தில் முழு நாள் நடைபெறும். இம் மாபெரும் கேக் மற்றும் உணவு அலங்காரக் கலை கண்காட்சி முற்றிலும் இலவசமாக நடைபெறும்.

கண்காட்சியுடன் இணைந்ததாக நடத்தப்படும் கேக் மற்றும் உணவு அலங்கரித்தல் போட்டியில் கலந்துகொண்டு என்பதினாயிரம் ரூபா பெறுமதியான சிறப்புச் சலுகை பரிசுகளை வென்றெடுங்கள். கேக் மற்றும் உணவு அலங்கரித்தல் போட்டியில் கலந்துகொள்வதற்கான பதிவுக் கட்டணம் ரூபா ஆயிரம் ஆகும்.

இவை மட்டுமல்ல, சர்வதேசப் புகழ்பெற்ற சமையல் கலை நிபுணர்களான Master Chef லொயிட் ஓபாத அவர்களுடன் Master Chef நிமல் பர்னாந்து வழங்கும் Bakery and Pastry செயல்முறைப் பயிற்சியும் நடைபெறும். இச் செய்முறைப் பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு உங்கள் பெயர்களை முன்பதிவு செய்துகொள்ளுங்கள் (0707101010 மற்றும் 0713322777).

சர்வதேசிய தரத்தில் அமைந்துள்ள உணவகங்களிலும் ஹோட்டல்களிலும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள நாடுவோருக்கு இதோ இன்னுமொரு சுவையான செய்தி!

சமையல் கலையில் தரம் 3 சிறப்புச் சான்றிதழ் கற்கை நெறியும் புத்தளம் நகரில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இக் கற்கை நெறி தொடர்பான முழுமையான தகவல்களை கண்காட்சியின் போது உங்களுக்கு வழங்கப்படும்.

எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெறும் கேக் மற்றும் உணவு அலங்காரக் கலைக் காண்காட்சிக்கு வாருங்கள். உணவுக் கலையின் அழகியலைக் கண்டு களியுங்கள்!